ஒகேனக்கல்லில் வெள்ளம்: குளிக்க முடியாமல் ஏமாற்றம்

ஒகேனக்கல்லில் வெள்ளம்: குளிக்க முடியாமல் ஏமாற்றம்
Updated on
1 min read

ஆடிப்பெருக்கு தினமான ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் லில் சுமார் 75 ஆயிரம் பேர் குவிந் தனர். ஆனால், வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றில் குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஆடிப்பெருக்கு தினத்தில் ஆறு, அணை, அருவி உள்ளிட்ட நீர் நிலைகளுக்கு சென்று குளித்து வழிபடுவது தமிழர்களின் வழக்கம். காவிரியை புனித நதியாக மக்கள் மதிப்பதால் காவிரி கரையோரங்களில் மக்கள் குளித்து வழிபடுவார்கள். தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு அன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரளுவர்.

அந்த வகையில் ஞாயிற்றுக் கிழமை ஒகேனக்கல்லில் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர். ஆகஸ்ட் 2 முதல் 4 வரை அரசு சார்பில் ஒகேனக்கல்லில் ஆடிப்பெருக்கு விழாவும் நடைபெற்று வருகிறது. எனவே மக்கள் கூட்டத்தை சமாளிக்கும் வகையில் தருமபுரியில் இருந்து சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டன.

ஆனால், காவிரியாற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிக அள வில் உள்ளது. எனவே 17-வது நாளாக ஞாயிறன்றும் ஆற்றில் குளிக்கவும், பரிசல் பயணம் மேற்கொள்ளவும் தடை விதிக்கப் பட்டது. ஆற்றில் குளித்து மகிழும் நோக்கில் ஒகேனக்கல் வந்த பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in