Published : 30 Aug 2014 02:22 PM
Last Updated : 30 Aug 2014 02:22 PM

சுதந்திர தின விழாவில் பங்கேற்றதற்காக மனைவியை வீட்டை விட்டு விரட்டிய கணவர் மீது புகார்

ஷரியத் சட்டத்தை மீறி, சுதந்திர தின விழாவில் பங்கேற்றதாக கூறி மனைவியுடன் 2 மகன்களையும் வீட்டை விட்டு விரட்டியதாக பாட்னாவில் ஆசிரியையின் கணவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பிஹார் தலைநகர் பாட்னாவில் உள்ள பெகுசராய் பகுதியில் வசிப்பவர் உமர் கான். கடந்த 2003- ஆம் திருமணமான இவருக்கு மனைவி நஸியா மற்றும் 2 மகன்கள் உள்ளனர். அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில், மனைவி நஸியா ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 15- ஆம் தேதி பள்ளியில் நடந்த சுதந்திர தின விழாவில் நஸியா கலந்து கொண்டதால் கோபமடைந்த கணவர் உமர், தனது மனைவி ஷாரியத் சட்டத்தை மீறி சதந்திர தின விழாவில் கலந்துகொண்டதாக கூறி, அவருடன் சேரத்து 2 மகன்களையும் வீட்டை விட்டு அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பெகுசராயில் உள்ள காவல் நிலையத்திற்கு சென்று நஸியா புகார் தெரிவித்துள்ளார்.இதை தவிர, திருமணம் ஆன முதலிலிருந்தே, வரதட்சணை கேட்டு நஸியாவிடன், உமர் பலமுறை பிரச்சினை செய்து வந்துள்ளார்.

மேலும், ஆசிரியை பணியை விட வேண்டும் என்றும் தன்னை கணவர் உமர் பலமுறை கண்டித்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டதாக பெகுசராய் காவல்துறை துணை ஆணையர் மனோஜ் குமார் தெரிவித்தார்.

இந்த புகார் குறித்து கருத்து கூறியுள்ள இஸ்லாமிய மதகுரு முஃப்தி முகமது கலீத் ஹுசேன் கசாமி, "ஷரியத் சட்டத்தை உமர் தவறாக பயன்படுத்துகிறார். சுதந்திர தினத்தில் பங்கேற்பது அல்லது தேசிய கொடியை ஏற்றுவது எல்லாம் ஷாரியத் சட்டத்திற்கு எதிரானவை அல்ல. மனைவியை வீட்டை விட்டு அனுப்ப இல்லாத காரணங்களை கூறி உமர், ஷரியத்தை அவமதிக்கிறார். மனைவியை வீட்டை விட்டு அனுப்ப வேறு காரணங்கள் இருக்கலாம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x