2024 மக்களவைத் தேர்தல் | “நாட்டின் அரசியல் சூழல் இப்போது பாஜகவுக்கு சாதகமாக இல்லை” - சரத் பவார்

2024 மக்களவைத் தேர்தல் | “நாட்டின் அரசியல் சூழல் இப்போது பாஜகவுக்கு சாதகமாக இல்லை” - சரத் பவார்
Updated on
1 min read

ஷீரடி (மகாராஷ்டிரா): மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாட்டின் அரசியல் சூழல் இப்போது பாஜகவுக்கு சாதகமாக இல்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவின் ஷீரடி நகரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், "கடந்த 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக, 2014-ல் மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, பல திட்டங்களை அறிவித்து, பல வாக்குறுதிகளை அளித்தது. ஆனால், அக்கட்சி அவற்றை செயல்படுத்தவில்லை. மக்களை ஏமாற்றியது. தற்போது மக்கள் இதனை உணரத் தொடங்கி இருக்கிறார்கள். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், நாட்டின் அரசியல் சூழல் இப்போது பாஜகவுக்கு சாதகமாக இல்லை.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என பாஜக கூறி வருகிறது. ஆனால், அக்கட்சி நாட்டின் பல மாநிலங்களில் அதிகாரத்தில் இல்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கேரளா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பாஜக அதிகாரத்தில் இல்லை" என தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in