Last Updated : 24 Aug, 2014 09:18 AM

 

Published : 24 Aug 2014 09:18 AM
Last Updated : 24 Aug 2014 09:18 AM

அரசு மரியாதையுடன் அனந்தமூர்த்தி உடல் தகனம்

கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்த மூர்த்தியின் உடல் பெங்களூரில் உள்ள கலா கிராமத்தில் முழு அரசு மரியாதையுடன் சனிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.

இந்திய அளவில் புகழ்பெற்ற விமர்சகரும், ஞானபீட விருது பெற்ற எழுத்தாளருமான யூ.ஆர்.அனந்த மூர்த்தி (81) கடந்த வெள்ளிக்கிழமை பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

அவரது ம‌றைவையொட்டி கர்நாடகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி, மற்றும் அரசு அலுவலகங்களுக்கு சனிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. 3 நாட்கள் அரசு துக்கம் கடைபிடிக்கப் படுவதால் மாநிலத்தில் அரசு அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. அரசு, பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

கட்சி தலைவர்கள் அஞ்சலி

பெங்களூரில் டாலர்ஸ் காலனி யில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடல் பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக ரவீந்திர கலாக்ஷேத்திராவில் வைக்கப்பட்டது.

கலை, இலக்கிய ஆர்வலர்கள், திரைத்துறையை சேர்ந்தவர்கள் எழுத்தாளர்கள், பல்வேறு சமூக நல அமைப்புகளை சேர்ந்தவர்களும் அனந்தமூர்த்திக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையா,காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே,முன்னாள் பிரதமர் தேவேகவுடா உட்பட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மருத்துவ செலவை அரசு ஏற்றது

மாலை 5 மணியளவில் அனந்த மூர்த்தியின் உடல் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் வைத்து பெங்க ளூர் ஞானபாரதி பல்கலைக்கழக வளாகத்துக்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. அப் போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தபோதும் ஆயிரக்கணக் காணவர்கள் நனைந்துக்கொண்டே ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

தொடர்ந்து கலா கிராமத்தில் அனந்த்மூர்த்தியின் உடல் தகனம் செய்யப்பட்டது. அங்கிருந்த அவரது மனைவி எஸ்தர், மகன் ஷரத், மகள் அனுராதா ஆகியோர் கதறி அழுத னர். இறுதியாக அனந்தமூர்த்தியின் முகத்தைப்பார்த்த கர்நாடக முதல்வர் சித்தராமையா கண்ணீர் விட்டு அழுதார்.

பின்னர் சித்தராமையா செய்தியாளர்களிடம் பேசும்போது, “யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் மறைவு, கன்னட மொழிக்கு ஏற்பட்ட பேரிழப்பு. என்னுடைய வாழ்வில் பெரிதும் மதிக்கும் அவரை சந்தித்த பிறகே,நான் முதல்வராக பதவியேற்று கொண்டேன். எதிர்கால தலைமுறையும் அவரை நினைக்கும் வகையில் அவருக்கு நினைவுச் சின்னம் எழுப்பப்படும்.

அனந்தமூர்த்தியின் அனைத்து மருத்துவ செலவுகளையும் (ரூ.11 லட்சம்) கர்நாடக அரசே ஏற்றுக் கொள்ளும். அனந்த்மூர்த்தியின் இறப்பை பட்டாசு வெடித்து கொண் டாடிய இந்து அமைப்புகளைச் சேர்ந் தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன்” என்றார்.

இந்து அமைப்புகளின் செயலை கண்டித்து காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள் கர்நாட கத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x