மணிப்பூரில் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்: 4 வீரர்கள் காயம்

மணிப்பூரில் தீவிரவாதிகள் குண்டு வீசி தாக்குதல்: 4 வீரர்கள் காயம்
Updated on
1 min read

இம்பால்: மணிப்பூரின் நகுஜங் மற்றும் சிங்டா குக்கி கிராமங்களில் மைத்தேயி மற்றும் குகி இனத்தவர் இடையே நேற்று முன்தினம் அதிகாலை துப்பாக்கி சண்டையில் மைத்தேயி பிரிவைச்சேர்ந்த ஒருவர் இறந்தார்.

அன்று மாலை இம்பால் - மோரே நெடுஞ்சாலையில், சென்று கொண்டிருந்த போலீஸ் கமாண்டோக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் ஒரு வீரர் குண்டு காயம் அடைந்தார்.

இந்நிலையில் மோரே நகரில் போலீஸ் கமாண்டோக்கள் முகாம் மீது நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் ராக்கெட்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 4 கமாண்டோக்கள் காயம் அடைந்தனர். இதையடுத்து தீவிரவாதிகளை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in