மத்திய அரசுக்கு ஓட்டுநர்கள் கோரிக்கை

மத்திய அரசுக்கு ஓட்டுநர்கள் கோரிக்கை

Published on

புதுடெல்லி: சாலை விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பியோடும் ஓட்டுநர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அகில இந்திய வாகன போக்குவரத்து அமைப்பு பிரதமர் மோடிக்கும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதியுள்ளது.

அதில், ‘‘ஓட்டுநர் தரப்பினரிடம் கலந்தாலோசிக்காமல் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. லாரி ஓட்டுநர்கள் நாட்டின் பொருளாதாரத்துக்கு பக்கபலமாகஇருப்பவர்கள். விநியோக சங்கிலியை தக்கவைப்பவர்கள். சாலை விதியின் முக்கியத்துவத்தை மதிக்கிறோம். ஆனால், ஓட்டுநர் வேலைக்கு புதிதாக யாரும் வரமாட்டார்கள். எனவே, புதிய சட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in