புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரித்த ராகுல் - சோனியா

புத்தாண்டை முன்னிட்டு வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரித்த ராகுல் - சோனியா
Updated on
1 min read

புதுடெல்லி: புத்தாண்டை முன்னிட்டு ராகுல் காந்தியும் அவரது தாயார் சோனியா காந்தியும் இணைந்து தங்கள் வீட்டில் ஆரஞ்சு ஜாம் தயாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் அவர்களது தோட்டத்துக்குச் சென்று சிறிய ஆரஞ்சுப் பழங்களை பறித்து கூடையில் நிரப்புகின்றனர். கூடை நிறைய பழத்தை எடுத்துக்கொண்டு இருவரும் சமையலறைக்கு வருகின்றனர். இருவரும் ஆரஞ்சுப் பழத்தை உரித்து சாறு எடுக்கின்றனர்.

“இது தங்கை பிரியங்கா காந்தியின் யோசனை. அவர் சொன்னசமையல் முறையை பின்பற்றி இந்த ஜாமை நான் தயாரிக்கிறேன்” என்று குறிப்பிடும் ராகுல்அடுப்பில் பாத்திரம் ஏற்றி சமைக்கஆரம்பிக்கிறார். அப்போது அவர்“பாஜக.காரர்களுக்கும் ஜாம் கிடைக்கும்” என்று சொல்ல, அதற்கு சோனியா காந்தி, “அவர்கள் இதை நம்மீது எறிந்துவிடுவார்கள்” என்கிறார். அதற்கு ராகுல், “அதனால் என்ன, மீண்டும் பழங்களை பறிப்போம்” என்று சொல்லிவிட்டு, இருவரும் சேர்ந்து சிரிக்கின்றனர்.

“ராகுல் காந்தியிடம் எனக்குபிடிக்காத விஷயம், என்னைப் போலவே அவனும் பிடிவாத குணம் கொண்டவன். ஆனால், அன்பும் அக்கறையும் மிகுந்தவன்”தன் மகனைப் பற்றி சோனியா வாஞ்சையுடன் பேசுகிறார்.

ஆரஞ்சு ஜாம் தயாரான பிறகு தாயும் மகனும் சேர்ந்து கண்ணாடிக் குடுவைகளில் அதை நிரப்புகின்றனர். அந்தக் குடுவைகளின் மேல், “சோனியா மற்றும் ராகுலிடமிருந்து அன்புடன்...” என்று எழுதப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் யூடியூப் சேனலில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in