பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளையும் கேட்கும் ஆம் ஆத்மி: இண்டியா கூட்டணியில் விரிசல்?

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்
Updated on
1 min read

புதுடெல்லி: பாஜகவுக்கு மாற்றாக தேசிய அளவில் இண்டியா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ் பிரிவு), கம்யூனிஸ்ட் கட்சிகள், ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் டெல்லி, பஞ்சாப் மாநிலங்களை ஆளும் ஆம் ஆத்மிகட்சி, இந்த மாநிலங்களில் வலுவான வாக்கு வங்கியைப் பெற்றுள்ளது. எனவே, வரும் மக்களவைத் தேர்தலில் பஞ்சாபில் உள்ள மொத்த மக்களவைத் தொகுதிகளான 13தொகுதிகளையும் ஆத் ஆத்மிகேட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் இண்டியா கூட்டணியில்விரிசல் விழும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பஞ்சாபில் காங்கிரஸ்கட்சிக்கு 8 எம்.பி.க்களும், பாஜகவுக்கு 2 எம்.பி.க்களும், சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 2 எம்.பி.க்களும், ஆம் ஆத்மிக்கு ஒரு எம்.பி.யும் உள்ளனர். இந்நிலையில் பஞ்சாபின் பதிண்டா பகுதியில் நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி பேரணியில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மிஒருங்கிணைப்பாளருமான கேஜ்ரிவால் பேசியதாவது:

பஞ்சாப் மாநில வளர்ச்சிக்காக பாஜக, அகாலி தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் எதையும் செய்யவில்லை. அகாலி தளம், காங்கிரஸ், பாஜக-அகாலி தளம் அரசுகள் மாநிலத்தில் அதிகாரத்தில் இருந்த போது எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் அந்த அரசுகள் முன்னெடுக்கவில்லை. ஒரே நேரத்தில் ரூ.1,125 கோடி நிதியை குறிப்பிட்ட துறைக்கு அந்தஅரசுகள் ஒதுக்கியதில்லை. நாங்கள்தான் இதைச் செய்துள்ளோம்.

பஞ்சாபில் உள்ள எதிர்க்கட்சிகள், மத்திய அரசுடன் கை கோத்துக் கொண்டு பஞ்சாப் மாநிலத்துக்கு வரவேண்டிய நிதியைத் தடுத்தன. தற்போது பஞ்சாபை ஆம் ஆத்மி அரசு ஆண்டு வருவதால், இங்கு சிறப்பான முறையில் வளர்ச்சித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எங்கள்அரசு கொண்டு வந்த திட்டங்களால்மாநில மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரும் மக்களவைத் தேர்தலில் 13 மக்களவைத் தொகுதிகளிலும் ஆம் ஆத்மியை பஞ்சாப் மக்கள் வெற்றி பெறச் செய்வார்கள்.

ரூ.1,125 கோடி நிதியில் மாநிலம் முழுவதும் மருத்துவமனைகள், பள்ளிகள் கட்டப்படும். அண்மையில் குர்தாஸ்பூருக்கு நான் சென்றிருந்தேன். அங்கு வளர்ச்சித் திட்டங்களுக்காக ரூ.1,850 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஹோஷியார்பூர் பகுதி வளர்ச்சிக்காக ரூ.850 கோடியில் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.

இதன்மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பஞ்சாபில் தனித்துப் போட்டியிடும் என்று தெரியவருகிறது. 13 மக்களவைத் தொகுதிகளையும் அந்தக் கட்சி கேட்பதாகக் கூறப்படுவதால், இண்டியாகூட்டணியில் நிச்சயம் விரிசல்ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் நேற்றைய பேரணியின்போது முந்தைய காங்கிரஸ் அரசை, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நேரடியாக கடுமையாகச் சாடினார். இதன்மூலம் பஞ்சாபில், காங்கிரஸுக்கு எதிராக ஆம் ஆத்மி நிச்சயம் களமிறங்கும் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in