ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கை: 4 மாநிலங்களில் 19 இடங்களில் என்ஐஏ சோதனை

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு எதிரான நடவடிக்கை: 4 மாநிலங்களில் 19 இடங்களில் என்ஐஏ சோதனை
Updated on
1 min read

புதுடெல்லி: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு எதிரான மற்றுமொரு நடவடிக்கையாக கர்நாடகா உள்பட 4 மாநிலங்களில் 19 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று (டிச.18) சோதனை நடத்தினர்.

தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ், இந்தியாவில் நாச வேலையில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதாகக் கிடைத்த தகவலை அடுத்து அந்த அமைப்புக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த வாரம் மகாராஷ்டிராவில் 40 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடைய 15 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஒருவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் முக்கியத் தலைவர் என்பதும், அமைப்பில் புதிதாக சேர்பவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து வைக்கக்கூடியவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, கர்நாடகா உள்பட 4 மாநிலங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். கர்நாடகாவில் 11 இடங்களிலும், ஜார்க்கண்ட்டில் 4 இடங்களிலும், மகாராஷ்டிராவில் 3 இடங்களிலும், டெல்லியில் ஓர் இடத்திலும் இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்தச் சோதனையில், கணக்கில் வராத மிகப் பெரிய தொகை, ஆயுதங்கள், கூர்மையான கருவிகள், முக்கிய ஆவணங்கள் மற்றும் பல்வேறு டிஜிட்டல் உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், வெளிநாட்டு சக்திகளின் உத்தரவுகளின்படி, இந்தியாவில் பயங்கரவாத செயல்களை மேற்கொள்ள இவர்கள் திட்டமிட்டதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in