மக்களவைத் தேர்தல் தொடர்பாக குஜராத் காங்கிரஸாருடன் கார்கே ஆலோசனை

மக்களவைத் தேர்தல் தொடர்பாக குஜராத் காங்கிரஸாருடன் கார்கே ஆலோசனை
Updated on
1 min read

புதுடெல்லி: அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தெலங்கானா மாநிலத்தில் மட்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

அதே நேரத்தில் ஆட்சி செய்துவந்த சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்து ஆட்சி அதிகாரத்தை இழந்துள்ளது. இந்நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் குஜராத் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, முகுல் வாஸ்னிக், கே.சி.வேணுகோபால், குஜராத் காங்கிரஸ் தலைவர் சக்திசிங் கோஹில் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். வரும் மக்களவைத் தேர்தலில், குஜராத்தில் பாஜக அரசின் தவறான ஆட்சி நிர்வாகம் குறித்து மாநில மக்களிடையே காங்கிரஸ் எடுத்துக் கூறவேண்டும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பது குறித்து வலியுறுத்த வேண்டும் என்றும் தலைவர்கள் வலியுறுத்தினர்.

இதன்மூலம் குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள வெற்றி வாய்ப்பு குறித்து காங்கிரஸ் தலைமை நிலையத்தில் ஆலோசனை நடைபெற்று வரு வது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in