Published : 17 Dec 2023 06:23 AM
Last Updated : 17 Dec 2023 06:23 AM
புதுடெல்லி: ‘‘வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக, சிறுநகரங்களின் வளர்ச்சி முக்கியம்’’ என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசின் முக்கியத் திட்டங்களின் பயன்கள் உரிய காலத்தில்அனைத்து பயனாளிகளுக்கும் சென்றடைவதை உறுதி செய்வதன்மூலம், மக்களிடைய மத்திய அரசின்திட்டங்களை பிரபலமடைய செய்வதற்காக, வளர்ந்த இந்தியா சபதயாத்திரையை (விக் ஷித் பாரத்சங்கல்ப் யாத்ரா நாடு முழுவதும் நடத்தப்படுகிறது.
சமீபத்தில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெற்ற ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ் கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் இந்த யாத்திரை தொடங்கி வைப் பது தாமதமானது. இந்நிலையில் இந்த மாநிலங்களில் வளர்ந்த இந்தியா சபத யாத்திரையை பிரதமர் மோடி நேற்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய அரசு திட்ட பயனாளிகளிடையே பிரதமர் மோடி பேசியதாவது:
வளர்ந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற சபதத்துடன், மோடியின் உத்திரவாத வாகனம் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தில் வளர்ந்தஇந்தியா சபத யாத்திரை ஆயிரக்கணக்கான கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு சென்றடைந்துள்ளது. குடும்ப உறுப்பினர் போல், அனைவரின் பிரச்சினைகளையும் தீர்க்க, மத்திய அரசு முயற்சிக்கிறது. ஏழைகள், விவசாயிகள், சிறு வணிகர்கள் மற்றும் சமுதாயத்தில் உள்ள பல பிரிவினருக்கும் நமது அரசு உதவியுள்ளது. அனைவரின் நம்பிக்கையும் முடிவடைந்த பிறகு மோடியின் உத்திரவாதம் தொடங்குகிறது.
சுதந்திரத்துக்குபின் நீண்ட காலமாக வளர்ச்சியின் பயன்கள் சில பெரிய நகரங்களுக்கு மட்டுமே கிடைத்தன. ஆனால், எனது அரசு சிறு நகரங்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்துகிறது. அதுதான்வளர்ந்த இந்தியாவின் அடித்தளத்தை வலுப்படுத்தும். மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை அனைவரும் பெற வேண்டும். வளர்ந்த இந்தியா சபத யாத்திரை நான் தொடங்கி வைத்தாலும், இன்று அந்த யாத்திரையை நாட்டு மக்கள்தான் வழிநடத்துகிறார்கள். இந்த யாத்திரை முடியும் இடத்தில், அங்குள்ள மக்கள் தங்கள் யாத்திரையை தொடங்குகின்றனர். நாட்டில் தற்சார்பு பெண்கள், தங்களை மட்டும் காத்துக் கொள்ளாமல், மற்றவர்களுக்கும் வரமாக இருக்கின்றனர். அதுபோல் கடினமாக உழைக்கும் மக்களுக்கும், எனது அரசு அயராது உழைக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் மற்றும் உள்ளூர் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT