

தந்தேவாடா: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள ஆம்தாய் கதி இரும்புத் தாது சுரங்கம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு மாவோயிஸ்ட்கள் தேடுதல் வேட்டையில் மாநில ஆயுதப்படை வீரர்கள் (சிஏஎஃப்) ஈடுபட்டனர். நேற்று காலை 11மணியளில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது மாவோயிஸ்ட்கள் திடீரென தாக்குதல் நடத்தினர்.
இதில் சிஏஎஃப் வீரர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு வீரர்காயமடைந்தார். இறந்த வீரரின்பெயர் கமலேஷ் சாஹு, அவர்சிஏஎஃப் பிரிவின் 9-வது பட்டாலியனைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மற்றொரு வீரர் வினய் குமார் சாஹு, சிகிச்சை பெற்று வருகிறார்.உயிரிழந்த கமலேஷ், சம்பா மாவட்டத்தை சேர்ந்தவர்.