Published : 13 Dec 2023 05:57 AM
Last Updated : 13 Dec 2023 05:57 AM
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு (33 சதவீத) இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவைகள் மற்றும் டெல்லி சட்டப்பேரவையில் பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல் சாசனத்தின் 106-வது திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதேபோல் ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையிலும், பெண்களுக்கு 3-ல் ஒரு பங்கு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019-ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவை மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய் நேற்று தாக்கல் செய்தார். இந்த மசோதா நிறைவேறினால் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் பெண்களின் பிரதிநிதித்துவமும், பங்களிப்பும் அதிகரிக்கும்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சவுகதா ராய், ‘‘ஜம்மு-காஷ்மீரில் இன்னும் சட்டப் பேரவை தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதனால் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்கு அவசரம் எதற்கு?’’ என கேள்வி எழுப்பினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT