ம.பி. பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் நடத்த உத்தரவு

ம.பி. பள்ளிகளில் சூரிய நமஸ்காரம் நடத்த உத்தரவு
Updated on
1 min read

சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மத்திய பிரதேசத்தில் அனைத்து கல்வி நிலையங்களிலும் இன்று காலை 9 மணிக்கு சூரிய நமஸ்காரம் மற்றும் பிராணாயாமம் நடத்த அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தலைநகர் போபாலில் உள்ள லால் அணிவகுப்பு மைதானத்தில் மாநில அளவிலான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் பள்ளி மாணவர்களுடன் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அமைச்சர்கள் விஜய் ஷா, தீபக் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.

- பிடிஐ

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in