

தேசிய மாநாடு கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா கூறும்போது, “உச்ச நீதிமன்ற தீர்ப்பு அதிருப்தி அளிக்கிறது. எங்களது போராட்டம் தொடரும். இந்த இடத்தை எட்ட பாஜக பல தசாப்தங்களை தாண்டி வந்துள்ளது. நாங்களும் நீண்ட போராட்டத்துக்கு தயாராகிறோம்" என்று தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாகவே மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக அந்த கட்சி குற்றம் சாட்டி உள்ளது. இதனை காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் கூறும்போது, “வதந்தியை பரப்ப சிலர் முயற்சி செய்கின்றனர். காஷ்மீரில் யாரும் கைது செய்யப்படவும் இல்லை, வீட்டுச் சிறையில் அடைக்கப்படவும் இல்லை" என்று தெரிவித்தார்.