மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் புதன்கிழமை பதவியேற்பு

மத்திய பிரதேச முதல்வராக மோகன் யாதவ் புதன்கிழமை பதவியேற்பு
Updated on
1 min read

போபால்: மத்திய பிரதேச மாநில முதல்வராக மோகன் யாதவ், நாளை பதவி ஏற்க உள்ளார். இது குறித்து அறிவிப்பு முறைப்படி வெளியாகி உள்ளது. அதே நாளன்று அம்மாநில துணை முதல்வர்களாக ராஜேந்திர ஷுக்லா, ஜெக்தீஷ் தேவ்தா ஆகியோர் பதவி ஏற்க உள்ளனர். போபால் நகரில் இந்நிகழ்வு நடைபெற உள்ளது.

“நான் பாஜகவின் சிப்பாய். உலகின் மிகப்பெரிய காட்சிகளில் ஒன்று பாஜக. ஏனெனில் கட்சியின் அனைத்து தரப்பு உறுப்பினர்கள் மீதும் அக்கறை கொண்ட கட்சி. என்னைப் போன்ற சாமானிய தொண்டனுக்கு கட்சி தலைமை முதல்வர் பொறுப்பை கொடுத்துள்ளதை எண்ணி நான் பெருமை கொள்கிறேன்.

கட்சிக்கு அப்பாற்பட்டு பாஜக ஆட்சி மத்திய பிரதேச மாநிலத்தில் அமைய வாக்களித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அனைவரது ஒத்துழைப்புடன் சிவ்ராஜ் சிங் சவுகான் அரசின் பணிகளை நான் முன்னெடுத்து செல்வேன். நாளை முதல்வராக பதவியேற்க உள்ளேன்” என மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

230 சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய மத்திய பிரதேச சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் கடந்த 3-ம் தேதி வெளியானது. இதில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in