உ.பி. யில் கோர விபத்து: குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு

உ.பி. யில் கோர விபத்து: குழந்தை உட்பட 8 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

பரேலி: உத்தர பிரதேசத்தின் பரேலி-நைனிடால் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அதன் டயர் வெடித்ததில் கார் கட்டுப்பாட்டை இழந்து, எதிர் திசையில் வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது.

இதனால் காரில் தீ பற்றியது. கார் கதவுகளை உள்ளிருந்து திறக்க முடியாமல் போனதால், அதில் இருந்த குழந்தை உட்பட 8 பேரும் தீயில் சிக்கி எரிந்தனர். கார் மோதியபோது பயங்கர சத்தம் கேட்டதால், அக்கம் பக்கத்தினர் வெளியே வந்து தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அவர்கள் வருவதற்குள் காருக்குள் சிக்கியவர்கள் தீயில் கருகி உயிரிழந்தனர். லாரியில் பயணம் செய்த இருவர் பயங்கர காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in