Published : 18 Jan 2018 09:56 AM
Last Updated : 18 Jan 2018 09:56 AM

நாட்டின் அமைதிக்கு சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு அவசியம்: ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் வலியுறுத்தல்

உள்நாட்டு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கும் “ரைஸினா பேச்சுவார்த்தை” மாநாட்டின் இரண்டாவது நாள் நிகழ்வு, டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத் பேசியதாவது:

இன்றைய சூழலில், உலக நாடுகள் அனைத்துமே ஒருசேர எதிர்கொள்ளும் பிரச்சினையாக தீவிரவாதம் உருவெடுத்துள்ளது. அனைத்து நாடுகளும் தீவிரவாதத்தின் வடுக்களை தாங்கியிருக்கின்றன. தீவிரவாதம் இத்தகைய அசுர வளர்ச்சியைப் பெற்றிருப்பதற்கு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் ஒரு முக்கியமான காரணம். தீவிரவாதிகள் இன்று அதிநவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, தீவிரவாதிகளால் எல்லை கடந்து இயங்க முடிகிறது. இது மிகவும் ஆபத்தானது.

கட்டுப்பாடுகள் இல்லாததால் இணையதளம், சமூக வலைதளங்களை தங்களின் தீவிரவாத நடவடிக்கைகளுக்காக அவர்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, முதல்கட்டமாக, இணையதளத்தின் மீதும், சமூக வலைதளங்களின் மீதும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். இதேபோல், தீவிரவாதத்துக்கு உதவிபுரியும் நாடுகளை கண்டறிந்து தனிமைப்படுத்த வேண்டியது இன்றியமையாதது. இவ்வாறு பிபின் ராவத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x