Published : 10 Dec 2023 05:31 AM
Last Updated : 10 Dec 2023 05:31 AM

ரயில் மோதலை தடுக்க 1,465 கி.மீ. பாதைகள்; 139 இன்ஜின்களில் ‘கவச்’ தொழில்நுட்பம்

புதுடெல்லி: ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்க, இதுவரை நாடு முழுவதும் 1,465 கி.மீ. ரயில் பாதைகள் மற்றும் 139 ரயில் இன்ஜின்களில் ‘கவச்’ தொழில்நுட்பம் பொருத்தப்பட்டுள்ளது.

நாட்டில் ரயில்கள் மோதிக்கொள்ளும் சம்பவம் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. இதைத்தடுக்க தானியங்கி ரயில் பாதுகாப்பு (கவச்) தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நடைமுறை கடந்த 2016-ம் ஆண்டுபிப்ரவரி மாதம் முதல் முறையாகபயணிகள் ரயிலில் பொருத்தப்பட்டு பரிசோதிக்கப்பட்டது.

இதற்கு பலன் கிடைத்ததால் இந்தக் கருவியை தயாரிக்க கடந்த 2018-19-ம் ஆண்டு 3 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு இந்த கருவி ரயில்வே துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இதுவரை 1465 கி.மீ. ரயில் பாதைகள் மற்றும் தென் மத்திய ரயில்வேபிரிவில் உள்ள 139 ரயில் இன்ஜின்களில் (மின்சார ரயில் உட்பட்) கவச் கருவி பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக 6,000 கி.மீ.: மேலும் டெல்லி - மும்பை மற்றும் டெல்லி - ஹவுரா வழித்தடங்களில் (சுமார் 3000 கி.மீ.)கவச் கருவியை பொருத்துவதற்கான ஒப்பந்தம் வழங்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் 6000 கி.மீ. பாதையில் கவச் கருவியை பொருத்துவது தொடர்பான ஆய்வு,திட்ட அறிக்கை தயாரிப்பு உள்ளிட்டஆயத்த பணிகள் நடைபெற்று வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கவச் எப்படி செயல்படும்? கவாச் தொழில்நுட்பமானது ரயில் ஓட்டுநர்களுக்கு விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும். குறிப்பாக ஒரே மார்க்கத்தில் இரு ரயில்கள் வந்தால் எச்சரிக்கும். அடர்த்தியான பனி மூட்டம் இருக்கும்போது எதிரே ரயில் வந்தால் எச்சரிக்கை செய்யும். அப்போது ஓட்டுநர் வேகத்தை குறைக்கத் தவறினால், இந்க கருவி தானாகவே பிரேக்கை அப்ளை செய்து ரயிலின் வேகத்தை மட்டுப்படுத்தி விபத்துக்கான சாத்தியத்தை குறைக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x