Published : 10 Dec 2023 04:56 AM
Last Updated : 10 Dec 2023 04:56 AM
அயோத்தி: உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் ஜனவரி மாதம்திறக்கப்பட உள்ளது. இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள்வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, அங்கு உள்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறிப்பாக, 15 புதிய ஓட்டல்களை கட்டவும் 8 டவுன்ஷிப்களை உருவாக்கவும் மாநில அரசுஅனுமதி வழங்கி உள்ளது.இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற திட்டமிடல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிதின் ரமேஷ் கூறும்போது, “அயோத்தியில் 23 பெரிய திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் தனியார் துறையினர் ரூ.4,500 கோடியை முதலீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் சில திட்டங்கள் அடுத்த 2 ஆண்டுகளில் முடிவடைந்து விடும். பெரிய திட்டங்கள் பல்வேறு கட்டங்களாக முடிக்கப்படும்” என்றார். டவுன்ஷிப் திட்டங்களில் அதிக அளவாக 59 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஒரு திட்டம் மும்பையைச் சேர்ந்த நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுபோல, தமிழ்நாடு (30,000 ச.மீ.), ஹரியாணா (25,000 ச.மீ.), மத்திய பிரதேசம் (18,000 ச.மீ.) மற்றும் ஆக்ராவைச் (3,000 ச.மீ.) சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் டவுன்ஷிப்களை உருவாக்க அனுமதி பெற்றுள்ளன.
இதுபோல, ஓட்டல்கள், ரிசார்ட்களை கட்டுவதற்காக உத்தரபிரதேசம் மட்டுமல்லாது பிறமாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் 1,450 ச.மீ. முதல் 29,000 ச.மீ. வரையிலான நிலங்களை வாங்கி உள்ளன.
கருவறை தயார்: உத்தர பிரதேசம், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய்நேற்று ‘எக்ஸ்' சமூக வலைதளத்தில், பக்தி பரவசப்படுத்தும் கோயிலின் கருவறை புகைப்படங்களை வெளியிட்டார்.
அதோடு அவர் வெளியிட்ட பதிவில், “ராமர் கோயில் கருவறைதயாராகிவிட்டது. மின் விளக்குகள் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. கருவறை புகைப்படங்களை மக்களுக்காக பதிவிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட 2 புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT