‘நீண்ட  ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்’ - சோனியா காந்திக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர் மோடி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று (சனிக்கிழமை) தனது 77-வது பிறந்த நாளைக் கொண்டாடும் நிலையில் அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சோனியா காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவராக இருக்கும் சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். உடல்நலக்குறைவு காரணமாக சமீபகாலமாக தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். அவரது மகனும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, மகள் பிரியங்கா வத்ரா ஆகியோர் காங்கிரஸ் கட்சியில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in