Published : 07 Dec 2023 06:02 AM
Last Updated : 07 Dec 2023 06:02 AM
புதுடெல்லி: நாடாளுமன்றம் மீது தாக்குதல் நடத்தப்போவதாக காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு மிரட்டல் விடுத்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் கனடாவின் குடியுரிமை பெற்றவர் குர்பத்வந்த் சிங் பன்னு. காலிஸ்தான் தீவிரவாதியும் தடை செய்யப்பட்ட ‘நீதிக்கான சீக்கியர்கள்’ அமைப்பின்தலைவருமான இவர் மிரட்டல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள் ளார். அதில் நரேந்திர மோடிஅரசு தன்னை கொல்ல முயற்சிப்பதாகவும் இதற்கு டிசம்பர் 13-ம் தேதிபதிலடி கொடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளார். டெல்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்தப் போவதாகவும் இது இந்திய நாடாளுமன்றத்தின் அடித்தளத்தையே அசைக்கும் என்றும் அவர் மிரட்டல்விடுத்துள்ளார். இந்த மிரட்டலை தொடர்ந்து பாதுகாப்பு அமைப்புகள் மிகுந்த விழிப்புடன் உள்ளன.
இதுகுறித்து டெல்லி காவல்துறையின் உயரதிகாரி ஒருவர்நேற்று கூறும்போது, “நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள் ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்க எவரும் அனுமதிக்கப்பட மாட்டார் கள். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. நாங்கள் விழிப்புடன் இருந்து வருகிறோம். விரும்பத்தகாத சம்பவங்களை தடுக்கஅனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாங்கள் எடுத்துள்ளோம்” என்றார்.
இந்திய நாடாளுமன்றம் மீது கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி 5 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் பாதுகாப்புபடையை சேர்ந்த 6 பேர் உட்பட9 பேர் உயிரிழந்தனர். 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலின் நினைவு தினம் வரும் 13-ம்தேதி அனுசரிக்கப்பட உள்ளது.
இந்த தாக்குதலுக்காக கடந்த 2013-ல் தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் படத்தையும் பன்னு தனது வீடியோவில் இணைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT