

அய்ஸ்வால்: மிசோரமில் 40 தொகுதிகளைக்கொண்ட சட்டப்பேரவைக்குநடந்த தேர்தலில் ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கும், முக்கிய எதிர்க்கட்சியான ஜோரம் மக்கள் இயக்கத்துக்கும் (இசட் பி எம்) இடையே கடும் போட்டி நிலவியது. பெரும்பான்மையை நிரூபிக்க 21 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில் ஜோரம் மக்கள் இயக்கம் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் மிசோரமில் ஆட்சி அமைக்க ஆளுநர் ஹரி பாபுகம்பம்பட்டியை சந்தித்து ஜோரம்மக்கள் இயக்கத்தின் தலைவர் லால்டுஹோமா நேற்று உரிமை கோரினார். இதையடுத்து லால்டுஹோமா நாளை (வெள்ளிக் கிழமை) பதவியேற்க உள்ளார்.