ஓடும் ரயிலில் பயணியை கீழே தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்

ஓடும் ரயிலில் பயணியை கீழே தள்ளிவிட்ட டிக்கெட் பரிசோதகர்
Updated on
1 min read

பாட்னா: பிஹாரின் சமஸ்திபூர் மாவட்டத்தில் உள்ள பத்தர் திகுலியா பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் நவல்பிரசாத். அண்மையில் இவர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஹவுராவுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது, அவர் முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுத்து தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் பயணித்துள்ளார். டிக்கெட் பரிசோதகர், ​​அவரை பொதுப்பெட்டிக்கு செல்லுமாறும், இல்லாவிட்டால் அபராதம் செலுத்த வேண்டி வரும் என்றும்எச்சரித்துள்ளார். இதில், இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, நவல் பிரசாத்தை, டிக்கெட் பரிசோதகர் ரயில் நிலையத்தில் கீழே தள்ளிவிட்டார்.

இதைத் தொடர்ந்து சக பயணிகள் அவரை மீட்டு உஜியர்பூரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இதுதொடர்பாக ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in