

பீமா கோரேகாவ் சம்பவம் குறித்து பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, "சிலர் எங்களைத் தாக்குகிறார்கள்; நாங்கள் அவர்களை பதிலுக்குத் தாக்குகிறோம். நாங்களாகச் சென்று யாரையும் தாக்குவதில்லை" என விளக்கிப் பேசினார்.
ஓஸ்மேனியா பல்கலைக்கழகத்தில், "அம்பேத்கரும் அரசியல் சாசனத்துவமும்" என்ற தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசியபோது அமைச்சர் இக்கருத்தை தெரிவித்தார்.
அவர் மேலும் பேசும்போது, "சிலர் எங்களைத் தாக்குகிறார்கள்; நாங்கள் அவர்களை பதிலுக்குத் தாக்குகிறோம். நாங்களாகச் சென்று யாரையும் தாக்குவதில்லை. அம்பேத்கர்வாதிகள் எந்த சாதிக்கும் எதிரானவர்கள் அல்ல. நாங்கள் யாரிடமும் சண்டையிடவும் விரும்பவில்லை. உங்களுக்கு சண்டையிடத் தோன்றினால் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக போர் புரியுங்கள். சொந்த நாட்டவருடன் சண்டை போடாதீர்கள்" என்றார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தனது கட்சி ஆதரவு அளித்ததற்குக் காரணம் மோடி அரசு இந்திய அரசியல் சாசனத்தையும் அம்பேத்கர் கொள்கையையும் மதிப்பதாலேயே என்று பேசினார்.