Published : 03 Dec 2023 07:10 AM
Last Updated : 03 Dec 2023 07:10 AM

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் ஆட்சியை பிடிக்கப் போவது யார்?

புதுடெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது இன்று மதியத்துக்குள் தெரிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய பிரதேசத்தைப் பொறுத்தவரை மொத்தம் 230 தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்க 116 இடங்கள் தேவை. ஆளும் பாஜக ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டது.

அங்கு தொடர்ந்து 3 முறை ஆட்சி செய்த பாஜக, 2018 தேர்தலில் தோல்வி அடைந்தது. கமல்நாத் தலைமையில் காங்கிரஸ்அரசு அமைந்தது. 15 மாதங்கள்கழிந்த நிலையில், ஜோதிர்ஆதித்ய சிந்தியா தலைமையிலானஎம்எல்ஏ-க்கள் காங்கிரஸில்இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். இதனால் கமல்நாத் ஆட்சிகவிழ்ந்து மீண்டும் பாஜக ஆட்சி அமைத்தது.

ராஜஸ்தானில் மொத்தம் 200 தொகுதிகள் உள்ளன. ஆட்சியை பிடிக்க 101 இடங்கள் தேவை. அங்கு அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. இம்மாநிலத்தில் காங்கிரஸும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. அந்த வகையில் பாஜக ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது.

சத்தீஸ்கரில் 90 தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்க 46 இடங்கள் தேவை. அங்கு பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த 2003 முதல் 2018 வரை ரமண் சிங் தலைமையிலான பாஜகஆட்சி நடைபெற்ற நிலையில், கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியைக் கைப்பற்றி யது குறிப்பிடத்தக்கது.

கருத்து கணிப்புகள்: 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலுக்கு பிறகு பல்வேறு ஊடகங்கள் கருத்து கணிப்புகளை வெளியிட்டுள்ளன. சத்தீஸ்கர், தெலங்கானாவில் காங்கிரஸும் ராஜஸ்தானில் பாஜகவும் ஆட்சியைப் பிடிக்கும் எனகருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதுபோல ம.பி. மிசோரமில் யாருக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காது என அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x