கோவாவில் டேங்கர் லாரியில் இருந்து அமோனியா வாயு கசிவு: மக்கள் வெளியேற்றம்

கோவாவில் டேங்கர் லாரியில் இருந்து அமோனியா வாயு கசிவு: மக்கள் வெளியேற்றம்
Updated on
1 min read

கோவா விமான நிலையம் அருகே டேங்கர் லாரியில் இருந்து அமோனியா வாயு கசிவு ஏற்பட்டதால் மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

கோவா மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம் அருகே, சிகலிம் என்ற பகுதியில் இன்று அதிகாலை அமோனியா வாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி ஒன்று விபத்துக்குள்ளானது. இதனால் டேங்கர் லாரியில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயு கசியத் தொடங்கியது.

அமோனியா வாயு பரவியதால் அப்பகுதியில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் சுவாசிக்க முடியாமல் திணறினர். உடனடியாக இருவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். மேலும் தீயணைப்பு வீரர்களும், பேரிடர் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அந்த பகுதியில் இருந்த 300க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அந்த நெடுஞ்சாலை மூடப்பட்டு வாகனங்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டன. பின்னர் வாயு கசிவு கட்டுப்படுத்தப்பட்டு நிலைமை சீரானது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in