

ராணுவ தினத்தை முன்னிட்டு படை வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தும் பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசுத் தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "ராணுவ தினத்தில் இந்திய ராணுவத்தின் துணிச்சல்மிகு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும், ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும், ராணுவத்தினர் குடும்பங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" எனக் கூறியுள்ளார்.
ராணுவ தினத்தன்று அனைத்து வீரர்களுக்கும், ஓய்வு பெற்ற வீரர்களுக்கும், ராணுவத்தினரின் குடும்பங்களுக்கும் நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் நம் ராணுவத்தின் மீது அசைக்கமுடியா நம்பிக்கையும் பெருமிதமும் கொண்டுள்ளனர். இயற்கைப் பேரிடர்களும், பெரும் விபத்துகளும் ஏற்படும்போது ராணுவத்தினர் மனிதாபிமானத்தோடு முன்நின்று உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். நமது ராணுவம் எப்போதும் தேச நலனை மட்டுமே முதன்மையாகக் கொண்டு செயல்படுகிறது. தேசத்துக்காக உயிர் நீத்த அனைவரையும் நான் நினைவுகூர்கிறேன். இத்தேசம் உயிர் தியாகம் செய்த வீரர்களை ஒருபோதும் மறவாது" எனக் கூறியுள்ளார்.