Published : 02 Jan 2018 04:28 PM
Last Updated : 02 Jan 2018 04:28 PM

நூதன எண்கள் கொண்ட 10 ரூபாய் நோட்டுகளை சேகரிக்கும் விசாகப்பட்டினம் இளைஞர்

ஆங்கில வருடப் புத்தாண்டையொட்டி, அந்த வருடத்தைக் குறிக்கும் வகையிலான பத்து ரூபாய் நோட்டை, ரிசர்வ் வங்கியில் இருந்து வாங்கி சேமித்து வருகிறார் இளைஞர் ஒருவர். இதேபோல் முக்கியமான எண்களைக் கொண்ட பத்து ரூபாய் நோட்டுகள் ஏராளமானவற்றைச் சேகரித்து வரும் இவர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்.

நம்மில் பலருக்கு பல விநோதமான பழக்க வழக்கங்கள் உள்ளன. பழமையான பொருட்களை சேகரிப்பது, தபால் தலை, பழைய நாணயங்கள், விதவிதமான தீப்பெட்டிகள், வெளிநாட்டு ரூபாய் நோட்டுகள் போன்றவைகளை இன்றும் பலர் சேமித்து வருகின்றனர். சேமித்ததைப் பத்திரமாக வைத்திருக்கின்றனர். பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகின்றனர்.

ஆந்திர மாநிலம்,விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், 10 ரூபாய் நோட்டில் அச்சடிக்கப்படும் எண்களை மையமாக வைத்து அவற்றைச் சேகரித்து வருகிறார். இவற்றை தங்களது நண்பர்கள், உறவினர்களுக்கு உரிய சமயத்தில் பரிசாகவும் வழங்குவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம், காஜுவாகா பகுதியைச் சேர்ந்தவர் யாதகிரி சண்டி. இவருக்கு ஒரு விநோத பழக்கம் உள்ளது. 10 ரூபாய் நோட்டில் உள்ள எண்களைக் கொண்டு இவர் அந்த நோட்டுகளை சேகரித்து வருகிறார்.

சமீபத்தில் இவர், ரிசர்வ் வங்கியில் இருந்து புத்தாண்டிற்காக 010118 எனும் இந்த ஆங்கிலப் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் இந்த எண் கொண்ட 10 ரூபாய் நோட்டைச் சேகரித்தார். இதேபோன்று கடந்த 2016ம் ஆண்டும், புத்தாண்டையொட்டி, இவர், 010117 எனும் எண்ணைக் கொண்ட பத்து ரூபாய் நோட்டைப் பெற்றுள்ளார்.

இதுமட்டுமின்றி, தனது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களின் பிறந்தநாளை குறிப்பிடும் எண் கொண்ட 10 ரூபாய் நோட்டுகளையும் தபால் மூலம் ரிசர்வ் வங்கியில் இருந்து வரவழைத்து, அவற்றைக் குறிப்பிட்ட நபர்களுக்கு பரிசாக வழங்கி வருகிறார்.

இவரின் மகன் சாய் தேஜ்ஜின் பிறந்தநாளான 15.9.2000 தேதிக்காக 150900, மகள் சரிஷ்மா பிறந்த நாளுக்காக 110902 ஆகிய எண் கொண்ட 10 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி மூலம் பெற்று பரிசாக வழங்கி உள்ளார். இதன் படி, குறிப்பிட்ட எண் கொண்ட 10 ரூபாய் நோட்டைப் பெற, பதிவுத் தபால், கூரியர் செலவு என மொத்தம் ரூ. 250 வரை செலவு செய்வதாக யாதகிரி சண்டி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x