Published : 26 Nov 2023 06:26 AM
Last Updated : 26 Nov 2023 06:26 AM

பிரபல பாடகி இசை நிகழ்ச்சியில் நெரிசல்: கேரள பல்கலை.யில் 4 மாணவர்கள் உயிரிழப்பு

கொச்சி: கேரள மாநிலம், கொச்சி பல்கலைக்கழகத்தில் நேற்று ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 மாணவிகள், 2 மாணவர்கள் உயிரிழந்தனர். 64 பேர் காயமடைந்தனர். அவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரியில் கொச்சிபல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தின் ஆண்டு விழாவை ஒட்டி நேற்றிரவு இசைக் கச்சேரி நடைபெற்றது. பிரபல பின்னணி பாடகி நிகிதா காந்தி பங்கேற்று இசைக் கச்சேரியை நடத்தினார். திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற இசைக் கச்சேரியை ரசிக்க ஏராளமான மாணவ, மாணவியர் குவிந்தனர். அரங்கம் நிரம்பியதால் வெளியே நின்றிருந்த மாணவ, மாணவியருக்கு அனுமதிமறுக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் முண்டியடித்து முன்னேறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 2 மாணவிகள், 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 64-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் களமசேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது எனறு சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x