தீவிரவாத தொடர்புள்ள அரசு ஊழியர்கள் 4 பேர் காஷ்மீரில் பணிநீக்கம்

தீவிரவாத தொடர்புள்ள அரசு ஊழியர்கள் 4 பேர் காஷ்மீரில் பணிநீக்கம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகர் எஸ்எம்எச்எஸ் மருத்துவமனையின் உதவிப் பேராசிரியர் நிசார்-உல்-ஹாசன், போலீஸ் கான்ஸ்டபிள் அப்துல் மஜீத் பட், உயர்கல்வித் துறை ஆய்வக பணியாளர் அப்துல் சலாம் ராதர், ஆசிரியர் ஃபரூக் அகமது மிர் ஆகிய 4 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்கள் 4 பேரும் பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ். மற்றும் சில தீவிரவாத அமைப்புகளுக்கு தளவாட உதவிகளை வழங்கியது, தீவிரவாத நடவடிக்கைகளுக்காக நிதி சேகரித்தது உள்ளிட்ட தேசவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அரசியலமைப்புச் சட்டத்தின் 11-வது பிரிவின்படி பணிநீக்கம் செய்யப்பட்டனர் என்று காஷ்மீர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குற்றச்சாட்டின் உண்மைத்தன்மை மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு கிடைத்த தகவல்களின் அடிப்படையில், நால்வரின் செயல்பாடுகள் அவா்களை அரசுப் பணியில் இருந்து நீக்குவதற்கு ஆதாரமாக இருப்பதால்நால்வரும் பணி நீக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் மாநிலஅரசின் ஊழியத்தைப் பெற்றுக் கொண்டு, தேச விரோதச் செயல்களில் ஈடுபட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 3 ஆண்டுகளில், ஜம்மு-காஷ்மீரில் அரசமைப்புச் சட்டத்தின் 311(2)(சி) பிரிவின்கீழ் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in