பயங்கரவாதிகளுடன் தொடர்பு | 4 அரசு ஊழியர்களை பதவி நீக்கம் செய்து ஜம்மு காஷ்மீர் அரசு நடவடிக்கை 

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: தீவிரவாத நடவடிக்கைகளில் தொடர்பு இருப்பதாகக் கூறி நான்கு அரசு ஊழியர்களை ஜம்மு காஷ்மீர் அரசு பதவி நீக்கம் செய்துள்ளது.

தேசிய பாதுகாப்பு நலனுக்காக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்க மாநில அரசுக்கு அதிகாரம் அரசியல் அமைப்புச் சட்டப்பிரிவு 311ன் பிரிவு (2)- ன் துணைப் பிரிவு (சி) யின் படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீநர் எஸ்எம்ஹெச்எஸ் மருத்துமனையின் உதவி பேராசிரியர் (மருத்துவம்) நசீர் உல் ஹசன், காவலர் அப்துல் மஜீத் பட், உயர் கல்வி துறை ஆய்வக உதவியாளர் அப்துல் சலம் ரதேர், கல்வி துறைச் சேர்ந்த ஆசிரியர் ஃபரூக் அகமது மிர் ஆகிய நான்கு பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து அரசு பொதுநிர்வாகத்துறை தனித்தனியாக வெளியிட்டுள்ள உத்தரவுகளில், கிடைக்கக் கூடிய தகவல்கள், வழக்கின் உண்மைத் தன்மைகள், சூழ்நிலைகளை ஆகியவைகளை கருத்தில் கொண்டு துணைநிலை ஆளுநர் திருப்தி அடைந்திருப்பதாகவும் அவர்களின் நடவடிக்கைகள் பணியில் இருந்து நீக்கும் நடவடிக்கைக்கு போதுமானதாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு அரசியல் அமைப்பு சட்ட பிரிவு 311(2)(சி) -ன் படி, 50க்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பதவிநீக்கம் செய்துள்ளது. இவர்கள் அனைவரும் அரசு சம்பளம் வாங்கிக்கொண்டு, பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகள், தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டுதல், தீவிரவாத சித்தாந்தங்களை பரப்புதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in