

அயோத்தி: உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் ஜனவரியில் திறக்கப்படவுள்ளது. இதில் அர்ச்சகர்களாக பணியாற்று வதற்கான விளம்பரத்தை ஸ்ரீ ராம ஜன்மபூமி தீர்த் ஷேத்ரா அறக்கட்டளை சமீபத்தில் வெளியிட்டது. இதையடுத்து ராமர்கோயில் அர்ச்சகர்கள் பணிக்குசுமார் 3,000 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இதுகுறித்து ராமர் கோயில் அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த தேவ் கிரி கூறும்போது, ‘‘விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 200 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இறுதியில் 20 பேர் தேர்வு செய்யப்பட்டு, 6 மாத பயிற்சிக்குப்பின் ராமர் கோயில் அர்ச்சகர்களாக பல பதவிகளில் நியமிக்கப்படவுள்ளனர்’’ என்றார்.