எனது திரையரங்கில் ஆபாச படம் வெளியிட்டேனா? - குமாரசாமி குற்றச்சாட்டுக்கு டி.கே.சிவகுமார் மறுப்பு

டி.கே.சிவகுமார்
டி.கே.சிவகுமார்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆபாச படங்களை திரையிட்டவர் என முன்னாள் முதல்வர் குமாரசாமி விமர்சித்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநிலத் தலைவருமான‌ குமாரசாமி தீபாவளிக்கு திருட்டு மின்சாரம் மூலம் அவரது வீட்டை அலங்கரித்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து விசாரித்த மின்வாரிய அதிகாரிகள் அவர் மீது மின்சார திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் குமாரசாமியின் வீட்டை சுற்றி ‘மின்சார திருடன்' என காங்கிரஸார் போஸ்டர் ஒட்டியதால் சர்ச்சை ஏற்பட்டது.

இதனால் கோபம் அடைந்தகுமாரசாமி நேற்று தனது கட்சியினர் மத்தியில் பேசுகையில், ‘‘கர்நாடகாவில் ஆபாச திரைப்படங்கள் திரையிட்டவரை பெரிய பொறுப்பில் அமர்த்தியுள்ளனர். அந்த மாதிரி படங்களை காட்டியவர் கட்சியின் தலைவராக இருந்தால், இப்படித்தான் போஸ்டர் ஒட்டுவார்கள்'என டி.கே.சிவகுமாரின் பெய‌ரை குறிப்பிடாமல் விமர்சித்தார்.

இதற்கு டி.கே. சிவகுமார் கூறும்போது, ‘‘குமாரசாமி முன்னாள் முதல்வர் என்ற தகுதியை மறந்துபேசுகிறார். அவர் என் தொகுதிக்குபோய், நான் அத்தகைய திரைப்படங்களை திரையிட்டவனா? எனமக்களிடம் கேட்கட்டும். இன்றைக்கும் எனக்கு சொந்தமாக திரையரங்கம் இருக்கிறது. அங்கே என்னபடம் ஓடுகிறது? என போய் பார்த்துவிட்டு வந்து பேச வேண்டும். ஆபாச படங்களை காட்டி இருந்தால் மக்கள் என்னை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற வைத்திருப்பார்களா? நான் ஏதாவது சட்டவிரோத செயலில் ஈடுபட்டு இருந்தால் குமாரசாமி நிரூபிக்க வேண்டும்.

அவ்வாறு நிரூபித்துவிட்டால் நான் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன்'' என பதிலளித் துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in