குஜராத், ராஜஸ்தானில் 5 கோயில்களை காண பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தனியார் நிறுவனங்களின் பங்களிப்போடு ரயில்வே சார்பில், பாரத் கவுரவ் ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இதன்படி நாகர்கோவில் இருந்து வரும் டிச.10-ம் தேதி புறப்படும் பாரத் கவரவ் சுற்றுலா ரயில், திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக குஜராத் மற்றும் ராஜஸ்தான் செல்கிறது. குஜராத் மாநிலத்தில் உள்ள துவாரகாதீஷ் கோயில், ராஞ்சோத்ரைஜி கோயில், ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத் ஜி கோயில், துவாராகாதீஷ் கோயில் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

12 நாட்கள் கொண்ட இந்த சுற்றுலாவுக்கு ஒருவருக்கு தூங்கும் வசதி பெட்டியில் ரூ.19,050-ம், மூன்றாம் வகுப்பு ‘ஏசி’ பெட்டியில் ஒருவருக்கு ரூ.32,400-ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல் பெற 7305858585 எண்ணை தொடர்புகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in