பாதுகாப்பு அகாடமியில் பெண் அதிகாரிகள் முதன்முறை அணிவகுப்பு

பாதுகாப்பு அகாடமியில் பெண் அதிகாரிகள் முதன்முறை அணிவகுப்பு
Updated on
1 min read

புனே: வரும் 30-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே கடக்வாஸ்லாவில் அமைந்துள்ள தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) மையத்தில் பயிற்சி நிறைவு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெறும் அணிவகுப்பில், முதன்முறையாக பெண் பயிற்சி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தற்போது இரண்டாம் ஆண்டு பயிற்சியில் உள்ளனர்.

இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளார். முதல் பேட்ச்சில் 19 பெண் பயிற்சி அதிகாரிகள் உள்ளனர். அவர்கள் 2025-ம் ஆண்டு மார்ச் மாதம் பயிற்சி முடிந்து பட்டம் பெறுவர். தற்போது 2-ம் ஆண்டு பயிற்சியில் இருக்கும் அவர்கள், 30-ம் தேதி அணிவகுப்பில் பங்கேற்க உள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in