Last Updated : 10 Jan, 2018 05:12 PM

 

Published : 10 Jan 2018 05:12 PM
Last Updated : 10 Jan 2018 05:12 PM

பணத்தை டெபாசிட் செய்க; இல்லையேல் திஹார் சிறை அதிக தூரமில்லை: ஜேபி குழுமத்துக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

ரியல் எஸ்டேட் வர்த்தக ஜெயபிரகாஷ் அசோசியேட்ஸ் நிறுவனம் கோர்ட் உத்தரவின் படி ரூ.125 கோடியை உடனடியாக டெபாசிட் செய்ய வேண்டும், இல்லையேல் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டில் திஹார் சிறைக்குச் செல்ல வேண்டி வரும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

ஜேபி இன்ஃப்ராடெக் நிறுவனத்திடம் வீடு வாங்க பணம் கொடுத்த மக்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதற்காக உச்ச நீதிமன்றம் இந்நிறுவனம் ரூ.2000 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இதன் பகுதி தொகைதான் ரூ.125 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 25-ம் தேதிக்குள் ஜேபி அசோசியேட்ஸ் ரூ.125 கோடியை உச்ச நீதிமன்ற பதிவகத்தில் டெபாசிட் செய்தாக வேண்டும்.

மேலும், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, கான்வில்கர், சந்திராசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு ஜேபி குழுமம் ஈடுபட்டுள்ள அனைத்து வீடுகட்டுமானத் திட்டங்கள் அனைத்தையும் பட்டியலிட்டு கோர்ட்டுக்கு அளிக்க உத்தரவிட்டனர்.

மேலும் திவால் சட்டத்தின் கீழ் ஜேபி அசோசியேட்ஸ் நிறுவனத்தைக் கொண்டு வர மத்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள விண்ணப்பம் குறித்து பிற்பாடு பரிசீலிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

சுமார் 30,000 பேர் ஜேபி இன்ஃப்ரா டெக்கின் பலதரப்பட்ட வீடுகட்டும் திட்டத்தில் வீடு வாங்குவதற்காக பணம் செலுத்தியிருந்தனர். இவர்களுக்கு வீடு அளிக்கப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x