இமாச்சல்: பேருந்து பள்ளத்தில் விழுந்து 20 பேர் பலி

இமாச்சல்: பேருந்து பள்ளத்தில் விழுந்து 20 பேர் பலி
Updated on
1 min read

சிம்லாவுக்கு 65 கிமீ தொலைவில் பேருந்து ஒன்று பெரும் பள்ளத்தில் விழுந்ததில் 20 பேர் பலியாயினர்.

30 பயணிகளுடன் இமாச்சல சாலைப் போக்குவரத்துக் கழக பேருந்து ஒன்று சிம்லாவிலிருந்து சவேராகுத் நோக்கிச் சென்று கொண்டிருந்தது, பசந்த்பூர்-கிங்கல் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்தப் பேருந்து கடர்காட் அருகே கட்டுப்பாட்டை இழந்து பெரும் பள்ளம் ஒன்றில் விழுந்தது.

இதில் அந்தப் பேருந்து சின்னாபின்னமானது. இதுவரௌஇ 17 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

காயமடைந்த 7 பேரின் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக மாவட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பேருந்து பள்ளம் நோக்கிச் செல்வதைக் கண்ட ஓட்டுனர் ஜன்னலில் இருந்து குதித்து உயிர்தப்பியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in