டெல்லியில் கதவு திறந்த நிலையில் ஓடிய மெட்ரோ ரயில்: அலட்சிய அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்

டெல்லியில் கதவு திறந்த நிலையில் ஓடிய மெட்ரோ ரயில்: அலட்சிய அதிகாரிகள் இருவர் பணிநீக்கம்
Updated on
1 min read

டெல்லியில் கதவுகள் திறந்தபடி மெட்ரோ ரயில் சென்றதால் பயணிகள் அனைவரும் மிகுந்த அச்சமடைந்தனர். மெத்தனமாக செயல்ப்பட்ட மெட்ரோ ரயில் அதிகாரிகள் 2 பேர் நீக்கம் செய்யப்பட்டனர்.

டெல்லியில் இன்று காலை, 9.40 மணியளவில், அர்ஜங்கர்- கித்தோர்னி இடையே ஓடிய மெட்ரோ ரயிலில், ஒரு பெட்டியின் கதவுகள் திறந்து கிடந்தன. கதவுகள் திறந்த நிலையிலேயே ரயில் ஓடியதால், அதில் இருந்த பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர். இதற்கு மெட்ரோ ரயில் அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என பயணிகள் புகார் தெரிவித்தனர்.

இது குறித்து டெல்லி மெட்ரோ ரயில்வே அதிகாரி ஒருவர் கூறும்போது, "இது கவனிக்கப்பட வேண்டிய விஷயம். அதிகாரிகள் அலட்சியப்போக்கு தான் இதற்கு காரணம். கதவுகள் திறந்த நிலையில் இருந்திருந்தாலும், பயணிகள் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. எனினும் இதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் இயங்கியபோது, பணியில் இருந்த அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இது குறித்த விசாரணை தீவிரப்படுத்தப்படும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in