பிளாட்பாரத்தில் ஏறிய அரசுப் பேருந்தால் 3 பேர் உயிரிழப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

விஜயவாடா: ஆந்திர மாநிலம், விஜயவாடா அரசு பேருந்து நிலையத்தில் நேற்று 12-வது பிளாட்பாரத்தில் ஆட்டோ நகர் பணிமனையை சேர்ந்த பேருந்தை ஓட்டுநர் பின்னால் எடுக்க முயன்றார்.

அப்போது திடீரென முன்னால் இருந்த பிளாட்பாரத்தின் மீது ஏறியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒப்பந்த ஊழியர் வீரய்யா, பயணிகுமாரி மற்றும் 6 வயது ஆண் குழந்தை ஆகியோர் பேருந்தில் சிக்கி உயிரிழந்தனர். சுகன்யா எனும் பெண் படுகாயமடைந்தார். இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ரூ.10 லட்சம், படுகாயம் அடைந்தவருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்குவதாகமுதல்வர் ஜெகன் மோகன் அறிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in