69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

69 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
Updated on
1 min read

தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

இதுதொடர்பாக, மைனர் ஆர்.அக் ஷயா மற்றும் மூன்று பேர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந் துள்ள மனுவில் கூறியிருப் பதாவது: தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2014-15-ம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பில் சேர விண்ணப்பித்தோம். எங்களது மருத்துவ மாணவர் சேர்க்கை தர வரிசை 923, 928, 932 மற்றும் 854.

உச்ச நீதிமன்றம் அளித்துள்ள உத்தரவுப்படி 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினால் எங்களுக்கு இடம் கிடைக்கும். ஆனால் தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால், எங்களது வாய்ப்பு பறிபோகிறது. எனவே எங்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்.

தமிழக அரசு சட்ட விரோதமாக பின்பற்றி வரும் 69 சதவீத இட ஒதுக்கீட்டையும் ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். இதனால் தகுதியுள்ள மாணவர்கள் தொழிற்கல்வி படிப்புகளில் சேர முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

கடந்த 2013 14 கல்வி யாண்டிலும் இதேபோன்ற வழக்கு தொடரப்பட்டதால், பாதிக்கப்பட்ட பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட்டு வழங்கப்பட்டன. கடந்த 18 ஆண்டுகளாக இதுபோன்ற உத்தரவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதே உத்தரவை இந்த ஆண்டும் வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.

இம்மனு, நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, கோபால கவுடா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன், வழக்கறிஞர் சிவபால முருகன் ஆஜராயினர். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் இதுகுறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கின் அடுத்த விசாரணை ஆகஸ்ட் 4-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in