நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் - டெல்லியிலும் உணரப்பட்ட பலத்த நில அதிர்வு

நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் - டெல்லியிலும் உணரப்பட்ட பலத்த நில அதிர்வு
Updated on
1 min read

காத்மாண்டு: நேபாளத்தில் இன்று பிற்பகல் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் காரணமாக, டெல்லியிலும் அதன் பலத்த அதிர்வுகள் உணரப்பட்டதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்தனர்.

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் 1 நிமிடத்துக்கு மேல் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிகிறது. இது ரிக்டர் அளவுகோலில் 6.4 ஆக பதிவானது. நேபாள நாட்டில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், நேபாளத்தில் மீண்டும் இன்று பிற்பகல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.6 ஆக பதிவானது. இதன் எதிரொலியாக டெல்லி உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இன்றும் சக்திவாய்ந்த அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவாகி இருந்தது. கடந்த 3 நாட்களில் இது 2-வது முறை எனக் கூறப்படுகிறது. டெல்லி, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இந்த அதிர்வு கடுமையாக உணரப்பட்டது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in