Published : 02 Nov 2023 06:33 AM
Last Updated : 02 Nov 2023 06:33 AM
புதுடெல்லி: இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 7.4 கோடி டன் உணவு வீணடிக்கப்படுகிறது. இது, 2022-23-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உணவு தானிய உற்பத்தியில் 22% என்பது குறிப்பிடத்தக்கது.
உலக உணவு தானிய உற்பத்தியில் 8% அதாவது 93.1 கோடி டன் உணவு வீணாவதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐசிஏஆர்) புள்ளிவிவரங் கள் தெரிவிக்கின்றன. தெற்காசியப் பிராந்தியத்தில் உணவு இழப்பை தடுப்பது தொடர்பாக நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கில் இந்த தகவல் பகிர்ந்து கொள்ளப்பட்டது.
அறுவடைக்குப் பிந்தைய இழப்பு மற்றும் உணவு கழிவுகள் என்பது நாடுகளின் புவியியல் தன்மையின் அடிப்படையில் வேறுபடுகின்றன. இது பெரும் பாலும், பயிர்கள், பொருட்கள், சேமிப்பு காலம், கால நிலை, தொழில்நுட்ப தலை யீடுகள், மனிதர்களின் பழக்கவழக்கம் மற்றும் மரபு ஆகியவற்றை சார்ந்தவை யாக உள்ளன.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத்தின் (யுஎன்இபி) உணவு கழிவு குறியீட்டு அறிக்கை 2021-ன்படி, உலகளவில் உணவுகள் கழிவுகளாக வீணடிக்கப்படுவதற்கு குடும்பங்கள், உணவு சேவைகள், சில்லறை விற்பனை நிலையங்கள் காரணங்களாக உள்ளன.
உலகளவில் ஒவ்வொரு தனிநபரும் ஆண்டொன்றுக்கு 121 கிலோ உணவை நுகர்வு நிலையில் வீணடிக்கின்றனர். இதில், 74 கிலோ உணவுகள் வீடுகளில் மட்டுமே வீணடிக்கப்படுகிறது. அதன்படி,இந்தியாவில் தனி நபர் ஒருவர் ஆண்டுக்கு 50 கிலோ உணவை வீணடிக்கிறார். இருப்பினும், இது தெற்காசியாவிலேயே மிகவும் குறைந்தபட்ச அளவு.
மாறாக 28 சதவீத விவசாய நிலங்கள் ஒருபோதும் சாப்பிட முடியாத அல்லது வீணடிக்க முடியாத உணவுகளை உற் பத்தி செய்ய பயன்படுத்தப்படுகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் ஜெர்மனியின் துநென் இன்ஸ்டிடியூட் இணைந்து மூன்று நாள் கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்துள்ளன.
இந்த கருத்தரங்கின் தொடக்க நாளான நேற்று ஐசிஏஆர் தலைவர் ஹிமான்ஷு பதக் கூறுகையில், “உணவுவீீணாவதற்கு, சேமிப்பு வசதிகள் இல்லாததே முக்கிய காரணம். புள்ளிவிவரங்களின் மூலம் அறிந்துகொண்டதன் அடிப்படையில் உணவு உற்பத்தியை அதிகரிப்பதில் காட்டும் கவனத்தை விட அதனை பாது காப்பதில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பது உறுதியாகி யுள்ளது. ஏனெனில், உணவு வீணாவது பொருளாதார இழப்பை ஏற்படுத்துவ தோடு மட்டுமல்லாமல், தனிநபர் ஆரோக்கியம், கால நிலையையும் பாதிப்பதாக அமைகின்றன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT