இடைக்கால ஜாமீனில் சந்திரபாபு நாயுடு விடுதலை

சிறையில் இருந்து வெளியே வந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு.
சிறையில் இருந்து வெளியே வந்த தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு.
Updated on
1 min read

நிதி ராஜமுந்திரி: வழக்கில் கைது செய்யப்பட்ட ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, நேற்று இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த 2011-ம் ஆண்டு, சந்திரபாபு நாயுடு ஆட்சி காலத்தில்திறன் மேம்பாட்டு நிதியில் ரூ.371 கோடி முறைகேடு நடந்ததாக சிஐடிபோலீஸார் கடந்த செப்டம்பர் 9-ம்தேதி அவரை கைது செய்து ராஜமுந்திரி சிறையில் அடைத்தனர்.

இதனைத் தொடர்ந்து சந்திரபாபுநாயுடு மீது மேலும் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நேற்று முன்தினம்கூட 4-வது வழக்காக மதுபான ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இதனிடையே சந்திரபாபுவுக்கு ஜாமீன் வழங்க கோரி, லஞ்சஒழிப்பு நீதிமன்றம், ஆந்திர உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் வரை அவரது வழக்கறிஞர்கள் கடந்த 52 நாட்களாக போராடினர்.இதனிடையே, தோல் ஒவ்வாமைநோய், வயிற்றுப்போக்கு ஆகியவற்றால் சந்திரபாபு அவதிப்பட்டார்.

மேலும், அவருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் அவரை பரிசோதித்த மருத்துவ குழுவினர் பரிந்துரைத்தனர். ஆதலால், சந்திரபாபு நாயுடுவின் வழக்கறிஞர்கள், உடனடியாகஅவருக்கு ஜாமீன் வழங்கிட வேண்டுமென ஆந்திர உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து வாதிட்டனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீனை வழங்கியது. இந்நிலையில் நேற்று மாலை சந்திரபாபுராஜமுந்திரி சிறையில் இருந்துவிடுதலை செய்யப்பட்டார். அவரை தெலுங்கு தேசம் கட்சியினர் பட்டாசு வெடித்து வரவேற்றனர். சந்திரபாபு நாயுடு பேசும்போது, ``கடந்த 52 நாட்களும் எனக்காக போராடியவர்களுக்கும், ஆதரவு தெரிவித்த நடிகர் பவன் கல்யாண் உட்பட நட்பு கட்சியை சேர்ந்த நண்பர்களுக்கு நன்றி’’ என உருக்கமாக பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in