

கிராமப்புறங்களில் அகன்ற அலைவரிசை (பிராட்பேண்ட்) இணைய வசதி ஏற்படுத்த பட்ஜெட்டில் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பட்ஜெட் உரையில் ஜேட்லி கூறியதாவது:
'டிஜிட்டல் இந்தியா' எனும் திட்டத்தின் கீழ் தேசிய ஊரக இணையம் மற்றும் தொழில்நுட்ப வசதி ஏற்படுத்தப்படும். இதனால் கிராமப்புறங்களில் இணையதள வசதியை வழங்க இயலும்.
மேலும், உள்நாட்டு கணினி வன்பொருள் மற்றும் மென்பொருள் தயாரிப்புகளை ஊக்குவிக்கவும் முடியும். இவற்றுடன், தகவல் தொடர்பு துறைகளில் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இவை தவிர, சிறு மற்றும் மத்திய தர நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்க, அவற்றின் தயாரிப்புகளை சில்லறை மற்றும் இணைய வர்த்தகம் மூலம் மேற்கொள்ள வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன, என்றார்.