இராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் இருட்டு அறையில் அடைப்பு

இராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள் இருட்டு அறையில் அடைப்பு
Updated on
1 min read

இராக்கில் கடத்தப்பட்ட இந்திய நர்ஸ்கள், மின்சாரம் இல்லாத இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இராக்கின் திக்ரித் நகரில் கிளர்ச்சியாளர்களால் நேற்று (வியாழக்கிழமை) இந்திய நர்ஸ்கள் 46 பேர் கடத்தப்பட்டனர்.

இந்நிலையில், மோசுல் நகரில் மின்சார வசதிகூட இல்லாத குடோனில் தாங்கள் அனைவரும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, கடத்தப்பட்ட நர்ஸ்களில் ஒருவர் தனது பெற்றோரை தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த ஷோபா - சசிகுமார் தம்பதியினரின் மகள் ஸ்ருதி. இவர் தனது பெற்றோரை தொடர்பு கொண்டுள்ளார்.

இது குறித்து ஷோபா கூறுகையில், "நேற்றிரவு 10.45 மணியளவில் எனது மகள் என்னை தொடர்புகொண்டாள். என்னிடம் பேசிய அவள்: 'நாங்கள் அனைவரும் மோசுல் நகரில் ஒரு குடோனில் அடைத்துவைக்கப்பட்டிருக்கிறோம். குடோனில் மின்சாரம் இல்லாததால் மொபைல் போன் சார்ஜ் செய்ய முடியவில்லை.

என் போனில் சார்ஜ் மிகவும் குறைவாகவே இருக்கிறது. இனி எப்போது உங்களை தொடர்பு கொள்வேன் என தெரியவில்லை. என்னிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வரவில்லை என்றால் நீங்கள் பதற்றம் அடையாதீர்கள். குடோனில் அடைத்து வைத்திருந்தாலும், கிளிர்ச்சியாளர்கள் எங்களை துன்புறுத்தவில்லை' என கூறினாள்" என்றார்.

தன் மகள் உள்பட இராக்கில் தவிக்கும் நர்ஸ்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டுக் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்கும் என தாங்கள் நம்புவதாக ஷோபாவும், சசிகுமாரும் தெரிவித்துள்ளனர். பெரும்பாலான பெற்றோர்கள் இதே நம்பிக்கையில்தான் உள்ளனர்.

ஆனால் ஒரு சில பெற்றோர்கள் இந்திய நர்ஸ்களை மீட்கும் விவகாரத்தில் மத்திய அரசு மெத்தனம் காட்டியதாலேயே இத்தகைய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

தரைமட்டமாக்கப்பட்ட விடுதி:

இராக்கில் சிக்கியுள்ள கேரளத்தைச் சேர்ந்த மெரினா ஜோஸ், கடைசியாக நேற்று அவரது தந்தையுடம் தொலைபேசியில் பேசிய போது, எங்களை மிரட்டி விடுதியில் இருந்து வெளியேற்றிய ஒரு சில நிமிடங்களிலேயே நாங்கள் தங்கியிருந்த விடுதி தரைமட்டமாக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இருப்பினும் மகள் நிச்சயம் பத்திரமாக மீட்கப்படுவார் என நம்புவதாக கூறுகிறார் மெரினாவின் தந்தை பி.டி.ஜோஸ்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in