ஹரியாணா: 12-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் தலைமையாசிரியர் உயிரிழப்பு

ஹரியாணா: 12-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் தலைமையாசிரியர் உயிரிழப்பு
Updated on
1 min read

ஹரியாணாவில் 12-ம் வகுப்பு மாணவன் துப்பாக்கியால் சுட்டதில் பள்ளித் தலைமையாசிரியர் உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில், "ஹரியாணாவின்  யமுனா நகரிலுள்ள பள்ளி ஒன்றில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருகிறார் ரித்து. இவர் இன்று (சனிக்கிழமை) காலை 11.30 மணியளவில் தனது அலுவலகத்தில் அமர்திருக்கும்போது அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அவரை நான்கு முறை துப்பாக்கியால்  சுட்டுள்ளார். இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்'' என்று தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரித்து சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். துப்பாக்கியால் சுட்ட மாணவனை போலீஸார் கைது செய்துள்ளர். இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

பள்ளி தலைமையாசிரியர் ஒருவர் அதே பள்ளியில் பயிலும் மாணவனால் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்த சம்பவம் ஹரியாணாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in