இந்து மத தலங்களை நிர்வகிக்க அனுமதி கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

இந்து மத தலங்களை நிர்வகிக்க அனுமதி கோரி மனு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடி
Updated on
1 min read

புதுடெல்லி: மூத்த வழக்கறிஞர் அஷ்வினி உபாத்யாய் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “அரசியல் சாசனத்தின் 26-வது பிரிவின்படி, அனைத்து மதத்தினரும், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நோக்கங்களுக்காக நிறுவனங்களை உருவாக்கவும் பராமரிக்கவும் உரிமை உள்ளது. ஆனால், இந்துக்கள், ஜைனர்கள், புத்த மதத்தினர் மற்றும் சீக்கி யர்களுக்கு இந்த உரிமை மறுக் கப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள 9 லட்சம் கோயில்களில் 4 லட்சம் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன.

அதேநேரம் முஸ்லிம், கிறிஸ்தவர்கள், பார்சிகளுக்கு தங்கள் மத வழிபாட்டு தலங்களை நிர்வகிக்க உரிமை வழங்கப்படுகிறது. இதுபோல இந்து உள்ளிட்ட பிற மதத்தினருக்கும் உரிமை வழங்க வேண்டும்” என கூறப்படிருந்தது.

இந்த மனுவை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலை மையிலான அமர்வு நேற்று விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் கூறும்போது, ‘‘விளம்பரத்துக்காக இந்த மனுவை தாக்கல் செய்துள்ளீர்கள். இதுபற்றி நாடாளுமன்றமும், மாநில சட்டப்பேரவைகளும்தான் முடிவு செய்ய முடியும். நீதிமன்றங்களால் இவற்றுக்கு தீர்வு கொடுக்க முடியாது” என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in