திருநங்கை அக்கை பத்மஷாலி திருமணம் முறைப்படி பதிவு: கர்நாடகாவில் இதுவே முதன்முறை

திருநங்கை அக்கை பத்மஷாலி திருமணம் முறைப்படி பதிவு: கர்நாடகாவில் இதுவே முதன்முறை
Updated on
1 min read

திருநங்கைகளின் உரிமைகளுக்காக போராடிவரும் திருநங்கை அக்கை பத்மஷாலி - சமூக செயற்பாட்டாளர் வாசுதேவ் ஜோடி திருமணத்தை கர்நாடக அரசு முறைப்படி பதிவு செய்துள்ளது.

கர்நாடகா மாநிலத்தில் ஒரு திருநங்கையின் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதன்முறையாகும்.

இந்த ஜோடிக்கு கடந்த 2017 20-ம் தேதி திருமணம் நடந்தது. ஆனால், சரியாக ஒருவருடம் கழித்தே அவர்களுடைய திருமணத்தை முறைப்படி பதிவு செய்ய முடிந்திருக்கிறது.

திருநங்கைகள் திருமணப் பதிவு தொடர்பாக உச்ச நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னதாகவே உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனாலும், கர்நாடக அரசவை திருநங்கைகள் திருமண உரிமைச் சட்டம் தொடர்பாக அண்மையில் திருத்தங்கள் மேற்கொண்ட நிலையில் நேற்று (23 ஜனவரி 2018) அக்கை - வாசுதேவ் தம்பதியின் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

தனது திருமணம் குறித்து அக்கை கூறும்போது, "எனக்கு திருமண உறவு மீது பெரிய ஈடுபாடு, நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால், 8 ஆண்டுகளுக்கு முன்னதாக நான் தன்பாலின உறவாளர்களுக்காக குரல் கொடுக்கும் சமூக செயற்பாட்டாளர் வாசுதேவை சந்தித்தேன். அப்போதிருந்தே எனது தோழிகள் எங்கள் திருமணத்தை பற்றி பேசுவர். அவர்களின் உந்துதலால் நாங்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். எங்கள் திருமணத்தை எங்கள் வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in