ஒடிசா ஆளுநராக ரகுபர் தாஸ், திரிபுரா ஆளுநராக இந்திரசேனா ரெட்டி நல்லு நியமனம்!

ரகுபர் தாஸ் மற்றும் இந்திரசேனா ரெட்டி நல்லு
ரகுபர் தாஸ் மற்றும் இந்திரசேனா ரெட்டி நல்லு
Updated on
1 min read

புதுடெல்லி: ஒடிசா ஆளுநராக ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ரகுபர் தாஸ் மற்றும் திரிபுரா ஆளுநராக தெலங்கானாவை சேர்ந்த பாஜக நிர்வாகி இந்திரசேனா ரெட்டி நல்லு நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை புதன்கிழமை (அக்.18) அன்று குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் 2019 வரையில் ஜார்கண்ட் மாநில முதல்வராக ரகுபர் தாஸ் இயங்கினார். தற்போது இவர் பாஜகவில் தேசிய அளவில் துணைத் தலைவராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in